1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரி ரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப் பட்டன. கணையாழி ஆரம்பத்தில் அதன் ஆசிரியக் குழுவினரின் அரசியல் ஈடுபாடு காரணமாய் - ‘தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளி லிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும், அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம்’ என்ற முடிவோடு ஆரம்பமாயிற்று.நாள்பட நாள்பட கி.கஸ்தூரி ரங்கன் அவர்கள் சென்னை வந்த பிறகு இ.பா போன்ற இலக்கிய ஜாம்பவான்களின் கூட்டமைப்பில் முழுக்க முழுக்க இலக்கிய இதழாகி, இன்றைய ம.ராஜேந்திரன் அவர்களது ஆர்வத்தால் புதிய புதிய அம்சங்களுடன், புதிய பரிமாணங்களுடனும் வளர்ந்து 50ஆம் ஆண்டுப் பொன்விழா கொண்டாடி உள்ளது.
தில்லியில கஸ்தூரி ரங்கனுடன் இ.பாவும், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் சுஜாதா அவர்களும், தி.ஜானகிராமன் அவர்களும் இணைந்து வித்தியாசமாக கணையாழியை வெளியிட்டு வந்தனர். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற சுஜாதா வாசகர்களை புதிய ரசனைக்கு இட்டுச் சென்று கணையாழிக்கு ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தித் தந்தார். தி.ஜாவின் மிகச் சிறந்த ‘மோகமுள்’ போன்ற நாவல்கள் வெளிவந்து கணையாழிக்கு கனம் கூட்டின. சென்னையில் அ.மி அவர்களது பங்கு மகத்தானது. தயாரிப்பில் பெரும்பணியாற்றியதோடு அவரும் நிறைய எழுதி கணையாழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தார்.
கணையாழியின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாகும் வாய்ப்பு 1987இல் தொடங்கப்பட்ட ‘தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி’ வாசகர்கள் கவனிக்கும்படி செய்தது. போட்டியில் பரிசு பெற்றவர்களில் ஒருவர் ம.ராஜேந்திரன். 1995இல் மே மாதம் கணையாழிக்கு முப்பது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கணையாழி தசரா விடம் கைமாறி ம.ரா. ஆசிரியர் ஆனார்...
முதல் இதழ் 40 பைசா விலையில் செய்தித்தாள் போன்று கவர்ச்சியின்றி வெளியான கணையாழி, இன்று வெகுவாகத் தோற்றத்திலும் தரத்திலும் உயர்ந்து நிற்கிறது..
நிறுவனர்
கி. கஸ்தூரி ரங்கன்
சிறப்பாசிரியர்
இந்திரா பார்த்தசாரதி
பதிப்பாளர்
ம. இராசேந்திரன்
ஆசிரியர்
மய்திலி ராசேந்திரன்
நிருவாக ஆசிரியர்
உரு. அரசவேந்தன்
துணை ஆசிரியர்கள்
ஜீவ கரிகாலன்
கவிதைக்காரன் இளங்கோ
ஆசிரியர் குழு
மு. ராமசாமி, ட்ராஸ்கி மருது
கி. நாச்சிமுத்து, சுபாஷிணி
நா. கண்ணன், சாந்தி சித்ரா
அ. நாகராசன்
ஆலோசகர்கள்
கே. எஸ். சுப்பிரமணியன்
வ. ஜெயதேவன்
ரெ. பாலகிருஷ்ணன்
சு. சங்கரவடிவேலு
நா. சுவாமிநாதன்
தமன் பிரகாஷ்
கவிதா சொக்கலிங்கம்
அயலக ஆலோசகர்கள்
எம்.ஏ. முஸ்தபா (சிங்கப்பூர்)
கார்த்திகா பார்த்திபன் (கனடா)
ஊக்கத்துணை
தென்றல் கருணாகரன்
தென்னரசி பிச்சைமணி
எழில் சாலமன், இரா. உலகரசி